Thursday, December 10, 2009

தங்கத்தீபம் (26/11/2009 - 02/12/2009)

ஒருவர் : ஸ்காபரோவில என்ன பிரச்சனையாம்? எங்கட சனங்கள் சுடுபட்டு யாரோமூண்டு பேர் செத்தினமாம்? அதுக்கு முதல் நாளும் தமிழ் பெடியன் ஒருத்தன் சுடுபட்டுசெத்ததாம்? இதுக்கும் அதுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ? உமக்கு செத்ததிலயாரும் தெரிஞ்ச ஆக்கள் இருக்கினமோ?

மற்றவர் : அதையேன் பேசுவான், எங்கட தமிழ் நாயளால வெளியில தமிழன் எண்டுசொல்லி தலைகாட்ட முடியாம இனி முக்காடுதான் போட்டு கொண்டு திரிய வேணும்போல இருக்கு. குமார் எண்டொரு காவாலி தன்ற தம்பியோட இன்னும் சிலவங்கோலயள சேர்த்து கூட்டமாக திரிஞ்சு சண்டித்தனம் விட்டு சுட்டு வெட்டிக்கொண்டுதிரியிறதுதான் பொழுது போக்காம். அந்த கூட்டத்துக்குள்ள அன்பு எண்டு ஒருகடப்புலி, தாயும் அவனுக்கு இல்ல, தகப்பனோடதான் இருக்கிறவனாம். தகப்பனும்,பாவம் அவன், ஒரு மகன் அதுவும் தாயையும்பறிகுடுத்து தனிச்சு போனான் எண்டு செல்லம் குடுத்துபழுதாக்கி வளத்துவிட, தேப்பன்ற சொல்லையும்கேக்காம ஊரெல்லாம் தறுதலையா திரிஞ்சவனாம்.அகிலன் எண்டொரு நல்ல பிள்ளையாம், தாய்தேப்பனை முந்தியே ஊரில ஆமி சுட்டு செத்ததாம்,வயது போன தாத்தா கிழவனோடதான் இங்கஇருக்கிறதாம், கெட்டிகாற பெடியனாம், வாட்டலூவிலபடிச்சுக்கொண்டு நேரம் கிடைக்கேக்க தன்ற நல்லபிறன்சோட சேர்ந்து ஊரில உள்ள அனாதைபிள்ளையழுக்கு காசு சேர்த்து கொண்டு தானும் தன்ரபாடுமா இருக்கிற அந்தப்பெடியனையும் பிறன்சையும்யாரோ ஒரு பெட்டை பிரச்சனையில அன்பு சுட்டுகொண்டுட்டானாம். இவ்வளத்திற்கும் அந்த பெட்டைதான்டபுள்கேம் விளையாடி இருக்குது எண்டும் கதைக்கினம்.1999 திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ள கதை ஒருஉண்மை சம்பவமாக இருந்து இருக்குமானால் அதுபற்றிய உண்மைகளை நடந்தது என்ன என்றுமுழுவதும் அறியாமல் நுனிப்புல் மட்டும் மேய்ந்த சிலர்சந்தித்தால் அவர்களில் இருவர்களது சம்பாசனைஉரையாடல் எப்படி இருந்து இருக்கும் என்ற பரம்ஜியின்கற்பனையில் எழுதப்பட்டதே முதலில் நீங்கள்வாசித்தது. சொல்லப்பட்டது கற்பனை உரையாடலாகஇருந்தபோதும் இப்படி பல உண்மையான சம்பாசனைகள் ஈழத்தமிழர்களிடையே சில காலங்களுக்கு முன்இந்த மண்ணில் அடிக்கடி நடைபெற்றதனையும் நாம்இன்னமும் மறக்கவில்லை.




1999, மேற்குலக நாடுகளில் வாழுகின்ற இளைய தலைமுறையினருக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளையும் அவற்றிற்கானகாரணங்களையும் எடுத்து சொல்லி, அவற்றை எப்படி தீர்க்கலாம் என்பதனை விடவும்அப்பிரச்சனைகளை வரவிடாமல் எப்படி தடுக்கலாம் என்பதற்கான பதிலையும் அதில்சொல்லி இருந்தமை பாராட்ட தக்கது. திரைக்கதையில் சொல்லப்பட்டுள்ள அத்தனைகதாபாத்திரங்களும் 1999 திரைப்படம் ஆரம்பித்து முடியும் வரை வெகு இயல்பாகநகர்வதற்கு திடமான வலு சேர்த்து இருக்கின்றன. ஈழமண்ணுக்கான விடுதலைப்போராட்ட விளைவுகளால் அக்காலங்களில் மேற்குலக நாடுகளுக்கு குடிபெயர்ந்ததமிழ் இளைஞர்களின் வாழ்க்கையை சோதித்த தனிமையும் வறுமையும் கொடுக்கும்விரக்திகள் இப்படியாக அவர்களின் மனங்களில் வக்கிர புத்திகளையும் வன்மஎண்ணங்களையும் தூண்டி விட்டது சகஜமே. அவ்விளைஞர்கள் ஈழ மண்ணில் பிறந்துவளர்ந்த காலங்களில் சந்தித்ததெல்லாம் இலகுவாக ஒன்றை சாதிப்பதற்க்குசுலபமான வழி ஆயுதங்களை தூக்குவதும் வேண்டாதவர் மண்டையில் போடுவதும்என்பதாக அவர்களது தமிழ் ஈழ விடுதலைப்போராட்ட கதாநாயகர்கள் புகட்டியபாடங்கள்தாம் என்பதுடன், பால பருவங்களில் சுற்று சூழல்களில் அவர்கள் சந்தித்துவளர்ந்ததெல்லாம் வன்முறையும் கொடுமைகளும் அவலங்களுமே என இருக்கும்போது அவர்களிடம் இருந்து மனிதம் நிறைந்த நல்ல நடத்தைகள் எதனையும் நாம்எதிர்பார்த்து விட முடியாதுதான். அதற்காக அவற்றை பரம்ஜி நியாயப்படுத்துகிறான்என்பதை விடவும் உண்மைகளை ஆராய்ந்து உணர்ந்து யதார்த்தங்களை ஏற்றுகொள்வதுதான் மனப்பக்குவத்துடன் மனிதத்திற்கு நாம் கொடுக்கும் மதிப்பாகும்.வருமுன் காப்போராக பிரச்சனைகளை எமது பிள்ளைகளிடையே வரவிடாமல் தடுக்கவல்ல அருமருந்து பெற்றோர்களாகிய எமக்கு இயற்கை கொடுத்திருக்கும்கல்நெஞ்சையும் கரைக்கவல்ல கண்ணீர்தான், அதாவது மனித இனத்தை மேன்மைபடுத்தும் அன்பு பாசம் நேசங்கள் தாம் என்பதனை இத்திரைப்பட கதையில், காலம்தாழ்த்தி தனது தவறுகளை உணர்ந்ததும், தான் பெற்ற பிள்ளையிடமே மன்னிப்பைகோரும் கதாநாயகனின் தந்தை பாத்திரம் மூலமும், திரைக்கதையின் வில்லனாகசித்திரிக்கப்பட்டு இருந்தாலும் தனது தம்பியின் மீது உயிரையே வைத்து நெஞ்சில்ஈரம் கொண்டு வாழும் குமார் தனது தம்பியாருடன் மனம் விட்டு பேசும் இடத்திலும்இந்த மண்ணில் வயதில் சிறியவர்கள் ஆனாலும் அவர்களுடன் விடயங்களைசினேகபூர்வமாக மனம்விட்டு பேசுவதன் மூலம் அவர்களை எம்வழி கொண்டு வரலாம்என்பதனை மிகச்சிறப்பாக திரைப்படத்தை பார்ப்பவர்கள் மனங்களில் ஆளமாகபதியும் வண்ணம் எடுத்து சொல்லுகிறது 1999.




அன்பு, அவனுக்கு தந்தை மட்டும் உண்டு தாயை ஈழப்போராட்டத்தில் இழந்தவன்.வழக்கமான ஈழத்திருநாட்டின் அனைத்து தமிழ் பெற்றோர்களின் மனத்தன்மைகளைகொண்டிருக்கும் தந்தை. அதாவது பிள்ளைகள் தாய் தகப்பனின் சொற்களுக்குபயந்து கட்டுப்படவேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக செய்யும்தியாகங்களையும் கடினமாக உழைத்து பாடுபடுவதையும் அவர்களாகவே உணர்ந்துநல்ல பிள்ளைகளாக படித்து முன்னேற வேண்டும். படித்து முடித்த பிள்ளைகள்வாழ்க்கையை பெற்றோர்களின் விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் மட்டும் அமைத்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. முரண்டினால் கையை காலை நீட்டிபடியப்பண்ணிவிடலாம் என்ற நப்பாசை. தந்தையின் அதட்டல்களுக்கு பழக்கப்பட்டுஎல்லா வற்றையும் தனது மனத்துக்குள் வைத்து புழுங்கும் அன்பு தனதுஉணர்வுகளுக்கு வடிகால் அமைக்க நல்லவனாக நன்றி உள்ளவனாக அவன் இருந்தபோதும் வன்ம உணர்வுகளால் தூண்டப்பட்டு சேரக்கூடாத கூட்டத்துடன் சேர்த்தி.




அகிலன் தனது தாய் தந்தையை ஈழ மண்ணின் வன்முறைகளுக்கு பலிகொடுத்தவன். ஆனாலும் தனது தாத்தாவுடன் மாத்திரமல்லாமல் எவருடனும் மற்றவர்உணர்வுகளை மதித்து மனம் விட்டு பேசும் தன்மை உடயவன். வன்மஎண்ணங்களுக்கு மனத்தில் இடம் கொடாமல் எல்லேரரையும் நேசிக்க தெரிந்தவன்.தன்னைப்போல் விடுதலைப்போரில் அனாதைகள் ஆக்கப்பட்டவர்களுக்காக இரங்கும்சுபாவம் கொண்டவன். இந்த இருவரும் எப்படி தேவையற்ற வகைகளில்மற்றவர்களின் நடத்தைகளினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதனை வெகுநேர்த்தியாக சொல்லி இருக்கின்றார் இயக்குனர். எப்படிகுமார் எனும் ஒருவன் வன்முறைக்குள் இழுத்துசெல்லப்படுகிறான் என்பதையும், போக்கிடமற்று வாழும்மற்றும் பல இளைஞர்கள் நேரங்களை அர்த்தமுள்ளவையாக ஆக்குவதற்கு வேறு வழிகளின்றி இவ்வாறானகுழுக்களுக்குள் இடறுப்பட்டு சின்னா பின்னப்படவேண்டி வருவதையும் பார்ப்பவர்கள் மனங்களில்பதியவைக்கும் வகையில் 1999 தயாரிப்பில் ஈடுபட்டஅனைவரும் உழைத்து இருக்கின்றனர். தாய்மை எனும்புனித்ததை மனித வாழ்வுக்கு தரும் வலுவானபெண்களின் கதா பாத்திரங்களுக்கு இத்திரைப்படத்தில்இடமில்லாது இருப்பது பெண்களற்ற உலகம் ஒருவறண்ட பாலை வனத்திற்கு ஒப்பானது அதன்காரணமாகவே இத்திரைப்படத்தின் கதாபாத்திரங்களில்பெண்களும் அவை தரும் தாய்மையின் மென்மையானஅன்பு ஸ்பரிசங்களின் அரவணைப்பு இல்லாமையால்வக்கிரம் நிறைந்த வாழ்க்கை நிலைகளை கொண்டுஉள்ளன எனும் உண்மையை 1999 திரைக்கதைஆமோதிப்பது போன்று உள்ளது.




1999 திரைப்படம் ஆரம்பித்து முடியும் வரைநல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? காலச்சூழ்நிலைகளினால் மாற்றப்படுபவர்கள் யார்? நண்பர்கள் யார்?விரோதிகள் யார்? எனத்தெழிவாக சொல்லப்பட்டுஇருந்தாலும் கோப்பி கடையில் கொலைகளைசெய்தவர்கள் யார்? தனது தம்பியாரின் இறப்புக்குகாரணமானவர்களை பழிக்கு பழி வாங்கத்துடித்தமரநாய் தான் என திரைப்படத்தை பார்படபவர்கள்ஊகித்து கொள்ள கூடியதாக மட்டுமே காட்சிகளும்வசனங்களும் அமைக்கப்பட்டு விளக்கமின்றிஇருந்ததாகவே தோன்றியது. அதனை திரைப்படத்தை பார்ப்பவர்களின் விளங்கிகொள்ளும் தன்மையற்ற இயலாமை என்று சொல்லிவிடவும் முடியாது. மரநாய்தன்னை கொலை செய்வதற்கு குறிவைத்து தேடுகின்றான் எனத்தெரிந்திருந்தும்தன்னை இலகுவில் அடயாளம் காட்டிக்கொடுக்க கூடிய தனது நீல நிற வாகனத்தில்நண்பனுடன் அன்பு இரவு பகலாக சுற்றுவது இளைஞர்களின் சிந்தித்துமுடிவெடுக்கும் திராணிகளற்ற முட்டாள் தனங்களுக்கு ஒரு உதாரணமாக உள்ளது.கதாபாத்திரங்களால் பேசப்படும் தமிழ் வசனங்களை அப்பட்டமான ஆங்கிலமொழிபெயர்ப்பிற்கு மாற்ற முயன்று இருப்பதனால் ஆங்கிலத்தில் திரையில் மிகசிறிய எழுத்துக்களாக ஒருபுறத்தில் ஆரம்பித்து மறுபுறம் வரை தோன்றுவதால்அவற்றை வாசித்து விழங்குவதற்குள் காட்சிகள் வேகமாக மாறிவிடுவது போல்இருப்பது தமிழ் மொழி தெரியாதவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் ஒரு வேகதடையாக இருக்கின்றது. இரு காதல் பாடல்களை தவிர தேவையற்ற காட்சிகள்இத்திரைப்படத்தில் இல்லாமல் இருப்பது வரவேற்க தக்கது. பாடல் காட்சிகளும் கூடசந்தைப்படுத்தல் காரணமாக சேர்க்கப்பட்டு இருக்கலாம். ஓலி ஒளிப்பதிவுகள்படத்தொகுப்பு போன்றவற்றில் இருக்கும் சில தொழில் நுட்ப குறைபாடுகள்தவிர்க்கப்பட்டு இருக்க வேண்டும் ஆனாலும் கதை சொல்லப்பட்ட பாணியில் அவைமறக்கடிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர்களுக்கும் மற்றும் இத்திரைப்படத்திற்கான அனைத்து பங்களிப்பாளர்களுக்கும்முக்கியமாக திரைப்படத்தை கொடுத்த லெனின் எம். சிவம் அவர்களுக்கும் எமதுபாராட்டுக்களை தெரிவிக்க 1999 திரையிடப்படும் திரையரங்குகளுக்கு அனைவரும்தவறாமல் தேடிச்சென்று படம் பார்த்து ஆதரவு கொடுத்து பாடம் படித்து வீடு திரும்பவேண்டும்.பார்வைகள்




தொடரும்.....................


உங்கள் கருத்துக்களுக்கு 416 230 1107


No comments:

Post a Comment