Wednesday, February 3, 2010

நோர்வேயில் முதல் முறையாக மாபெரும் தமிழ் திரைப்பட விழா- 2010

தமிழ் திரையுலகம் ஒவ்வொரு வருடமும் புதிய சாதனைகளை படைத்தது முன்னேறி வருகிறது.
ஒரு வருடத்திற்கு நூறு படங்கள் வெளிவரும் நிலையிலிறிந்து முன்னேறி , 2009-இல்131 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. காளிதாசில் பேசத்தொடங்கிய தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு அகவை 78. தமிழர்கள் வாழ்விலும், உலகத்தமிழர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றாக கலந்து விட்ட தமிழ் சினிமா, உலகத்தின் விழித்திரைகளில் மெல்ல மலரத் தொடங்கி உள்ளது.

இன்று தமிழ் மக்களின் முக்கிய பொழுதுபோக்காக திரைப்படங்கள்தான் என்ற நிலை உருவாகி உள்ளது . அதற்கு காரணம் , தமிழ் படங்களின் உயர்ந்து வரும் தரம் மற்றும் மக்களின் வாழ்க்கை நெறி முறையில் அவைகள் ஆற்றும் முக்கிய பங்கு . தமிழ் சினிமாவின் வியாபாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களும் இருக்கிறார்கள்.
இப்படியான ஒரு சூழலில் தரமான கதைகளை கொண்ட தமிழ்ப்படங்களை உலகத் திரையரங்குகளில் திரையிடுவதர்க்கான முன் முயற்ச்சியாகவும், தமிழ்ப்படங்களை வேற்று நாட்டு இனத்தவர்கள் பார்த்து மகிழவும், நோர்வேயில் முதல் முறையாக தமிழ் திரைப்பட விழா அரங்கேறுகிறது. உலகத்தில் எத்தனை திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழர்களால் நடாத்தப்படும் தனிப் பெரும் விழாவாக இது மாறும் என நம்புகின்றேன். இத் திரைப்பட விழாவை நோர்வேயில் ஆரம்பித்து வைப்பதில், நோர்வேயில் வாழ்கின்ற தமிழர்கள் நாம் பெருமை அடைகிறோம்.

தமிழ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க, தமிழகத்தில் இருந்து திரைப்பட இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், சசிக்குமார், மிஷ்கின் மற்றும் சமுத்திரகனி ஆகியோரோடு கனடாவில் இருந்து "1999" என்னும் திரைப்பட இயக்குனர் எஸ்.லெனின் அவர்களும் நோர்வேக்கு வருகை தருகின்றார்கள்.

இத்திரைப்பட விழாவை முன் நின்று நாடத்துவதில் வி.என்.மியூசிக் டிரீம்ஸ் நிறுவனம் மகிழ்ச்சியடைகின்றது. தமிழ் திரைப்பட விழா சிறப்பாக நடைபெற என்னோடு இணைந்து எனது நண்பர்கள் பலரும், தமிழகத்தில் இருந்து Moser baer CEO கோ.தனஞ்செயன் , வி.எஸ்.உதயா அவர்களும் பெரும் பணி ஆற்றுகின்றனர். அவர்கள் வழங்குகின்ற பெரிய ஒத்துழைப்போடு மேலும் இவ்விழா சிறப்புற நோர்வேயில் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களின் நல்வரவை வேண்டி நிக்கின்றேன்.

இந்த விழாவின் நிறைவு நாளான அன்று நீங்கள் தெரிவு செய்கின்ற திரைப்படங்கள், நான்கு வகையான விருதுகளைப் பெறப்போகின்றன என்பது மகிழ்வான செய்தியாகும். திரை அரங்கம் நிறைந்த தமிழ் மக்களை காண நோர்வே நாட்டுக்கு வருகின்ற இயக்குனர்களை, நோர்வே வாழ் தமிழர்கள் அனைவரும் வரவேற்போம் வாருங்கள்.

இந்த வருடம் தமிழ் திரைப்பட விழாவிற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள படங்கள்:


6 ஆம் திகதி, மாசி மாதம் 2010

10.00 காலை – “மாயாண்டி குடும்பத்தார்”
13.00 பிற்பகல் – “பேராண்மை ”
16.00 மாலை – “அஞ்சாதே”
19.00 மாலை – “ பொக்கிஷம்”
21.40 இரவு – “பூ”


7 ஆம் திகதி, மாசி மாதம் 2010
11.00 காலை – “மீண்டும்” (நோர்வேயில் எடுக்கப்பட்ட திரைப்படம்)
13.00 பிற்பகல் – “ஈ”
16.00 மாலை – “1999” (கனடாவில் எடுக்கப்பட்ட திரைப்படம்)

8 ஆம் திகதி, மாசி மாதம் 2010

13.00 பிற்பகல் – “சுப்ரமணியபுரம்”
16.00 மாலை – “யோகி”
19.00 மாலை – “பசங்க”
21.40 இரவு – “நாடோடிகள்”

9 ஆம் திகதி, மாசி மாதம் 2010
16.00 மாலை – “நந்தலாலா

என 13 திரைப்படங்கள் Filmenshus Kino திரையரங்கில் திரையிடப் படுகின்றது.
நீங்களும் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்கான நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை ஆகிக்கொண்டு இருக்கிறது.
உங்களுடைய நுளைவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முந்திக்கொள்ளுங்கள். தமிழ் திரைப்பட விழா தொடர்பான மேலதிக தொடர்புகளுக்கு:

தொலைபேசி இலக்கம் : 0047 913 70 728

/தமிழ் திரைப்பட விழா
இணைப்பாளர்
/வி.என்.மியூசிக் டிரீம்ஸ்
வசீகரன் சிவலிங்கம்
Vaseeharan Sivalingam

Friday, January 15, 2010

Montreal Premiere


We have finalized the venue and time for the Montreal Premiere. With the generous support of Concordia University Tamil Mantram (CUTAM), we will be having our Montreal Premiere at Concordia University. As for the agenda, we will follow the premiere format. The artists will be introduced at the end of the show followed by a Q&A session. CUTAM will organize and conduct this event. Tickets will be sold for $10 each and we are looking for volunteers to help us sell the tickets in Montreal. Please reach out to your friends and family in Montreal and other areas of Quebec and urge them to come and see 1999.

We have also created a facebook event, please forward this event details to everyone in your network.

Event: Montreal Premiere
Date: January 30th
Time: 6:00 PM
Location: Concordia University, Henry F. Hall Building, local H-110
1455 de Maisonneuve West, Montreal, H3G 1M8
Tickets: $10
Facebook Event: http://www.facebook.com/event.php?eid=252348411031

Tuesday, January 12, 2010

European Premiere at Tamil Film Festival 2010 in Oslo, Norway


We are excited to note that 1999 has been officially selected to open this year’s Tamil Film Festival that will take place in Oslo Norway from Feb 6 to 09th. The festival will take place at Filmenshus Kino in Oslo and will feature 15 finest Tamil Films that came out recently including 1999. Our movie will be scheduled to be screened on Feb 7 at 4:00 PM. Some of the other selected movies include Samuthirakani’s “Nadodigal”, Mishkin’s “Nandalala”, and Sasikumar’s “Subramaniapuram”. It is a huge honor to see 1999 participate and competes with these high caliber films. Mishkin, Samuthirakani, Sasikumar and S. P. Jananathan will be among the many directors from Tamil Nadu who will participate in this festival. This will be the European Premiere for 1999 and we encourage everyone to consider joining us in Oslo.

Event: European Premiere at Tamil Film Festival 2010 in Oslo, Norway.
Date: 7 February 2010
Time: 4 p.m.
Place: Filmenshus Kino , Oslo, Norway

Friday, December 11, 2009

Alberta (Edmonton) Premiere


Event: Alberta Premiere


Date:December 20th, 2009


Time: Starting at 9:30 AM in the morning.


Location: South Edmonton Common Cineplex Galaxy, 1525 – 99th Street, Edmonton, Alberta.


Tickets: $10/Person


Contacts: 780 498 1070 ctcedmonton@gmail.com


A very successful Ottawa Premiere this weekend. (Dec 5th, 09)

Hello all,

We had a very successful Ottawa Premiere this weekend. We had two shows and both of them had reasonably good crowd. Overall response to the movie was overwhelmingly positive. Ottawa audience seemed very impressed with 1999 and they really made us feel that we did something special.

On behalf of our team, we sincerely want to thank every organization for helping us with the Ottawa Premiere. Without their support, we couldn’t have done such successful show.We also want to thank all our friends who helped us with distributing tickets, putting up posters, standing at the doors and everything else they did for this event to make it a success. We also want to thank everyone who helped us sell the tickets and helped us promote this event. Last but not least we want to thank all those people who came out to watch 1999 and gave us great feedback.

We also want to announce that we will be having another show in Ottawa. Due to the overwhelming responses and request we received, we have decided to do one more show in Ottawa for those who couldn’t make it. We are working to book the theater. Once we have confirmed the booking for the theater, we will send out the note to everyone about the date and time. We are looking to do this show 1st or 2nd weekend in January. Please inform your friends in Ottawa about this.

Thank you for your time and attention,
1999 Team

Thursday, December 10, 2009

தங்கத்தீபம் (26/11/2009 - 02/12/2009)

ஒருவர் : ஸ்காபரோவில என்ன பிரச்சனையாம்? எங்கட சனங்கள் சுடுபட்டு யாரோமூண்டு பேர் செத்தினமாம்? அதுக்கு முதல் நாளும் தமிழ் பெடியன் ஒருத்தன் சுடுபட்டுசெத்ததாம்? இதுக்கும் அதுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ? உமக்கு செத்ததிலயாரும் தெரிஞ்ச ஆக்கள் இருக்கினமோ?

மற்றவர் : அதையேன் பேசுவான், எங்கட தமிழ் நாயளால வெளியில தமிழன் எண்டுசொல்லி தலைகாட்ட முடியாம இனி முக்காடுதான் போட்டு கொண்டு திரிய வேணும்போல இருக்கு. குமார் எண்டொரு காவாலி தன்ற தம்பியோட இன்னும் சிலவங்கோலயள சேர்த்து கூட்டமாக திரிஞ்சு சண்டித்தனம் விட்டு சுட்டு வெட்டிக்கொண்டுதிரியிறதுதான் பொழுது போக்காம். அந்த கூட்டத்துக்குள்ள அன்பு எண்டு ஒருகடப்புலி, தாயும் அவனுக்கு இல்ல, தகப்பனோடதான் இருக்கிறவனாம். தகப்பனும்,பாவம் அவன், ஒரு மகன் அதுவும் தாயையும்பறிகுடுத்து தனிச்சு போனான் எண்டு செல்லம் குடுத்துபழுதாக்கி வளத்துவிட, தேப்பன்ற சொல்லையும்கேக்காம ஊரெல்லாம் தறுதலையா திரிஞ்சவனாம்.அகிலன் எண்டொரு நல்ல பிள்ளையாம், தாய்தேப்பனை முந்தியே ஊரில ஆமி சுட்டு செத்ததாம்,வயது போன தாத்தா கிழவனோடதான் இங்கஇருக்கிறதாம், கெட்டிகாற பெடியனாம், வாட்டலூவிலபடிச்சுக்கொண்டு நேரம் கிடைக்கேக்க தன்ற நல்லபிறன்சோட சேர்ந்து ஊரில உள்ள அனாதைபிள்ளையழுக்கு காசு சேர்த்து கொண்டு தானும் தன்ரபாடுமா இருக்கிற அந்தப்பெடியனையும் பிறன்சையும்யாரோ ஒரு பெட்டை பிரச்சனையில அன்பு சுட்டுகொண்டுட்டானாம். இவ்வளத்திற்கும் அந்த பெட்டைதான்டபுள்கேம் விளையாடி இருக்குது எண்டும் கதைக்கினம்.1999 திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ள கதை ஒருஉண்மை சம்பவமாக இருந்து இருக்குமானால் அதுபற்றிய உண்மைகளை நடந்தது என்ன என்றுமுழுவதும் அறியாமல் நுனிப்புல் மட்டும் மேய்ந்த சிலர்சந்தித்தால் அவர்களில் இருவர்களது சம்பாசனைஉரையாடல் எப்படி இருந்து இருக்கும் என்ற பரம்ஜியின்கற்பனையில் எழுதப்பட்டதே முதலில் நீங்கள்வாசித்தது. சொல்லப்பட்டது கற்பனை உரையாடலாகஇருந்தபோதும் இப்படி பல உண்மையான சம்பாசனைகள் ஈழத்தமிழர்களிடையே சில காலங்களுக்கு முன்இந்த மண்ணில் அடிக்கடி நடைபெற்றதனையும் நாம்இன்னமும் மறக்கவில்லை.




1999, மேற்குலக நாடுகளில் வாழுகின்ற இளைய தலைமுறையினருக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளையும் அவற்றிற்கானகாரணங்களையும் எடுத்து சொல்லி, அவற்றை எப்படி தீர்க்கலாம் என்பதனை விடவும்அப்பிரச்சனைகளை வரவிடாமல் எப்படி தடுக்கலாம் என்பதற்கான பதிலையும் அதில்சொல்லி இருந்தமை பாராட்ட தக்கது. திரைக்கதையில் சொல்லப்பட்டுள்ள அத்தனைகதாபாத்திரங்களும் 1999 திரைப்படம் ஆரம்பித்து முடியும் வரை வெகு இயல்பாகநகர்வதற்கு திடமான வலு சேர்த்து இருக்கின்றன. ஈழமண்ணுக்கான விடுதலைப்போராட்ட விளைவுகளால் அக்காலங்களில் மேற்குலக நாடுகளுக்கு குடிபெயர்ந்ததமிழ் இளைஞர்களின் வாழ்க்கையை சோதித்த தனிமையும் வறுமையும் கொடுக்கும்விரக்திகள் இப்படியாக அவர்களின் மனங்களில் வக்கிர புத்திகளையும் வன்மஎண்ணங்களையும் தூண்டி விட்டது சகஜமே. அவ்விளைஞர்கள் ஈழ மண்ணில் பிறந்துவளர்ந்த காலங்களில் சந்தித்ததெல்லாம் இலகுவாக ஒன்றை சாதிப்பதற்க்குசுலபமான வழி ஆயுதங்களை தூக்குவதும் வேண்டாதவர் மண்டையில் போடுவதும்என்பதாக அவர்களது தமிழ் ஈழ விடுதலைப்போராட்ட கதாநாயகர்கள் புகட்டியபாடங்கள்தாம் என்பதுடன், பால பருவங்களில் சுற்று சூழல்களில் அவர்கள் சந்தித்துவளர்ந்ததெல்லாம் வன்முறையும் கொடுமைகளும் அவலங்களுமே என இருக்கும்போது அவர்களிடம் இருந்து மனிதம் நிறைந்த நல்ல நடத்தைகள் எதனையும் நாம்எதிர்பார்த்து விட முடியாதுதான். அதற்காக அவற்றை பரம்ஜி நியாயப்படுத்துகிறான்என்பதை விடவும் உண்மைகளை ஆராய்ந்து உணர்ந்து யதார்த்தங்களை ஏற்றுகொள்வதுதான் மனப்பக்குவத்துடன் மனிதத்திற்கு நாம் கொடுக்கும் மதிப்பாகும்.வருமுன் காப்போராக பிரச்சனைகளை எமது பிள்ளைகளிடையே வரவிடாமல் தடுக்கவல்ல அருமருந்து பெற்றோர்களாகிய எமக்கு இயற்கை கொடுத்திருக்கும்கல்நெஞ்சையும் கரைக்கவல்ல கண்ணீர்தான், அதாவது மனித இனத்தை மேன்மைபடுத்தும் அன்பு பாசம் நேசங்கள் தாம் என்பதனை இத்திரைப்பட கதையில், காலம்தாழ்த்தி தனது தவறுகளை உணர்ந்ததும், தான் பெற்ற பிள்ளையிடமே மன்னிப்பைகோரும் கதாநாயகனின் தந்தை பாத்திரம் மூலமும், திரைக்கதையின் வில்லனாகசித்திரிக்கப்பட்டு இருந்தாலும் தனது தம்பியின் மீது உயிரையே வைத்து நெஞ்சில்ஈரம் கொண்டு வாழும் குமார் தனது தம்பியாருடன் மனம் விட்டு பேசும் இடத்திலும்இந்த மண்ணில் வயதில் சிறியவர்கள் ஆனாலும் அவர்களுடன் விடயங்களைசினேகபூர்வமாக மனம்விட்டு பேசுவதன் மூலம் அவர்களை எம்வழி கொண்டு வரலாம்என்பதனை மிகச்சிறப்பாக திரைப்படத்தை பார்ப்பவர்கள் மனங்களில் ஆளமாகபதியும் வண்ணம் எடுத்து சொல்லுகிறது 1999.




அன்பு, அவனுக்கு தந்தை மட்டும் உண்டு தாயை ஈழப்போராட்டத்தில் இழந்தவன்.வழக்கமான ஈழத்திருநாட்டின் அனைத்து தமிழ் பெற்றோர்களின் மனத்தன்மைகளைகொண்டிருக்கும் தந்தை. அதாவது பிள்ளைகள் தாய் தகப்பனின் சொற்களுக்குபயந்து கட்டுப்படவேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக செய்யும்தியாகங்களையும் கடினமாக உழைத்து பாடுபடுவதையும் அவர்களாகவே உணர்ந்துநல்ல பிள்ளைகளாக படித்து முன்னேற வேண்டும். படித்து முடித்த பிள்ளைகள்வாழ்க்கையை பெற்றோர்களின் விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் மட்டும் அமைத்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. முரண்டினால் கையை காலை நீட்டிபடியப்பண்ணிவிடலாம் என்ற நப்பாசை. தந்தையின் அதட்டல்களுக்கு பழக்கப்பட்டுஎல்லா வற்றையும் தனது மனத்துக்குள் வைத்து புழுங்கும் அன்பு தனதுஉணர்வுகளுக்கு வடிகால் அமைக்க நல்லவனாக நன்றி உள்ளவனாக அவன் இருந்தபோதும் வன்ம உணர்வுகளால் தூண்டப்பட்டு சேரக்கூடாத கூட்டத்துடன் சேர்த்தி.




அகிலன் தனது தாய் தந்தையை ஈழ மண்ணின் வன்முறைகளுக்கு பலிகொடுத்தவன். ஆனாலும் தனது தாத்தாவுடன் மாத்திரமல்லாமல் எவருடனும் மற்றவர்உணர்வுகளை மதித்து மனம் விட்டு பேசும் தன்மை உடயவன். வன்மஎண்ணங்களுக்கு மனத்தில் இடம் கொடாமல் எல்லேரரையும் நேசிக்க தெரிந்தவன்.தன்னைப்போல் விடுதலைப்போரில் அனாதைகள் ஆக்கப்பட்டவர்களுக்காக இரங்கும்சுபாவம் கொண்டவன். இந்த இருவரும் எப்படி தேவையற்ற வகைகளில்மற்றவர்களின் நடத்தைகளினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதனை வெகுநேர்த்தியாக சொல்லி இருக்கின்றார் இயக்குனர். எப்படிகுமார் எனும் ஒருவன் வன்முறைக்குள் இழுத்துசெல்லப்படுகிறான் என்பதையும், போக்கிடமற்று வாழும்மற்றும் பல இளைஞர்கள் நேரங்களை அர்த்தமுள்ளவையாக ஆக்குவதற்கு வேறு வழிகளின்றி இவ்வாறானகுழுக்களுக்குள் இடறுப்பட்டு சின்னா பின்னப்படவேண்டி வருவதையும் பார்ப்பவர்கள் மனங்களில்பதியவைக்கும் வகையில் 1999 தயாரிப்பில் ஈடுபட்டஅனைவரும் உழைத்து இருக்கின்றனர். தாய்மை எனும்புனித்ததை மனித வாழ்வுக்கு தரும் வலுவானபெண்களின் கதா பாத்திரங்களுக்கு இத்திரைப்படத்தில்இடமில்லாது இருப்பது பெண்களற்ற உலகம் ஒருவறண்ட பாலை வனத்திற்கு ஒப்பானது அதன்காரணமாகவே இத்திரைப்படத்தின் கதாபாத்திரங்களில்பெண்களும் அவை தரும் தாய்மையின் மென்மையானஅன்பு ஸ்பரிசங்களின் அரவணைப்பு இல்லாமையால்வக்கிரம் நிறைந்த வாழ்க்கை நிலைகளை கொண்டுஉள்ளன எனும் உண்மையை 1999 திரைக்கதைஆமோதிப்பது போன்று உள்ளது.




1999 திரைப்படம் ஆரம்பித்து முடியும் வரைநல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? காலச்சூழ்நிலைகளினால் மாற்றப்படுபவர்கள் யார்? நண்பர்கள் யார்?விரோதிகள் யார்? எனத்தெழிவாக சொல்லப்பட்டுஇருந்தாலும் கோப்பி கடையில் கொலைகளைசெய்தவர்கள் யார்? தனது தம்பியாரின் இறப்புக்குகாரணமானவர்களை பழிக்கு பழி வாங்கத்துடித்தமரநாய் தான் என திரைப்படத்தை பார்படபவர்கள்ஊகித்து கொள்ள கூடியதாக மட்டுமே காட்சிகளும்வசனங்களும் அமைக்கப்பட்டு விளக்கமின்றிஇருந்ததாகவே தோன்றியது. அதனை திரைப்படத்தை பார்ப்பவர்களின் விளங்கிகொள்ளும் தன்மையற்ற இயலாமை என்று சொல்லிவிடவும் முடியாது. மரநாய்தன்னை கொலை செய்வதற்கு குறிவைத்து தேடுகின்றான் எனத்தெரிந்திருந்தும்தன்னை இலகுவில் அடயாளம் காட்டிக்கொடுக்க கூடிய தனது நீல நிற வாகனத்தில்நண்பனுடன் அன்பு இரவு பகலாக சுற்றுவது இளைஞர்களின் சிந்தித்துமுடிவெடுக்கும் திராணிகளற்ற முட்டாள் தனங்களுக்கு ஒரு உதாரணமாக உள்ளது.கதாபாத்திரங்களால் பேசப்படும் தமிழ் வசனங்களை அப்பட்டமான ஆங்கிலமொழிபெயர்ப்பிற்கு மாற்ற முயன்று இருப்பதனால் ஆங்கிலத்தில் திரையில் மிகசிறிய எழுத்துக்களாக ஒருபுறத்தில் ஆரம்பித்து மறுபுறம் வரை தோன்றுவதால்அவற்றை வாசித்து விழங்குவதற்குள் காட்சிகள் வேகமாக மாறிவிடுவது போல்இருப்பது தமிழ் மொழி தெரியாதவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் ஒரு வேகதடையாக இருக்கின்றது. இரு காதல் பாடல்களை தவிர தேவையற்ற காட்சிகள்இத்திரைப்படத்தில் இல்லாமல் இருப்பது வரவேற்க தக்கது. பாடல் காட்சிகளும் கூடசந்தைப்படுத்தல் காரணமாக சேர்க்கப்பட்டு இருக்கலாம். ஓலி ஒளிப்பதிவுகள்படத்தொகுப்பு போன்றவற்றில் இருக்கும் சில தொழில் நுட்ப குறைபாடுகள்தவிர்க்கப்பட்டு இருக்க வேண்டும் ஆனாலும் கதை சொல்லப்பட்ட பாணியில் அவைமறக்கடிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர்களுக்கும் மற்றும் இத்திரைப்படத்திற்கான அனைத்து பங்களிப்பாளர்களுக்கும்முக்கியமாக திரைப்படத்தை கொடுத்த லெனின் எம். சிவம் அவர்களுக்கும் எமதுபாராட்டுக்களை தெரிவிக்க 1999 திரையிடப்படும் திரையரங்குகளுக்கு அனைவரும்தவறாமல் தேடிச்சென்று படம் பார்த்து ஆதரவு கொடுத்து பாடம் படித்து வீடு திரும்பவேண்டும்.பார்வைகள்




தொடரும்.....................


உங்கள் கருத்துக்களுக்கு 416 230 1107


Monday, November 23, 2009

1999 Review by Manuel Jesudasan for Tamil Mirror



“Generation gap” – a very popular phrase in the Tamil community. It denotes an imaginary distance between parents and their children/elders and youth, culturally.

According to the Tamil youths unwillingness on the part of the parents to understand and accept the change in time and cultural environment that influence and impact the today’s youth causes the generation gap.

The elders on the other hand claim to have been brought up in the culture that embodies the norms that was elicited in the poem, “The Charge of the Light Brigade” by Alfred, Lord Tennyson:

“Forward, the Light Brigade!”
Was there a man dismay’d?
Not tho’the soldier knew
Someone had blunder’d:
Theirs not to make reply,
Theirs not to reason why,
Theirs but to do and die:
Into the valley of Death
Rode the six hundred.

According to the elders therefore, disobedience on the part of the youth to the thinking and the dictates of theirs causes the generation gap.

Who is responsible for creating the Generation gap, the parents or the children or both?

The debate goes on for generations.

With the exodus in the 1990s of the Tamils from their homeland due to violence perpetrated against them and with the migration in large numbers in western countries, this generation gap further widened.

The realization of the devastating effect of letting the gap widen is brought out in the movie appropriately. 1999 exactly depicts the mentality of the youths who engage in violence in Canada; their heart hardened having witnessed killings of their kith and kin. In the movie, Kumar, as a child, witnessed his parents and siblings being killed by the IPKF in front of his eyes, and he manages to seek refuge in Canada with his little brother whom he loves dearly. He starts up a gang to protect his younger brother. The brothers’ entry into adulthood without guidance from the parents/elders is the outcome of their disastrous life.

On the other hand, Anpu, although did not have the love of his mother, yet nurtured by a loving father, joins Kumar’s gang and gets himself into the troubled world. Admission, finally, by the father that he is responsible for having driven his son away from him and away from the desirable world and into the troubled world is the ultimate message in the movie.

“I have alienated my son by failing to understand his emotional needs. My providing materialistic things did not help my son……..”

The theme is not an unknown one. The incidents highlighted in the movie still continue to torment the community. Yet the community fears to talk about it and thus far is unable to stop it.

Lenin, the director of the movie deserves praise for his courage in selecting a powerful story which needed to be highlighted at the time of confusion the Tamil community is forced to encounter in Canada. At the end of the movie my companion commented, “Won’t those involved in this movie be targeted by the gangs?” I replied, “This movie will soften their hearts and make them open their eyes.”

1999 deserves its accolades:

- an official selection of the Vancouver International Film Festival (VIFF)
- ranked as one of the top ten Canadian films at VIFF
- Toronto International Film Festival considers it to be one of the top 10 movies out of hundreds of movies produced in Canada in 2008
- Canadian Immigrant magazine ranked 1999 as one of the top 5 movies to watch at VIFF
- First Canadian Tamil movie to reach an international stage.

The characterization of each cast is excellent. Every actor in the movie performed its role to please the audience. It is true that, at times, there were indication of inexperience before the camera of some of the casts. That too brought out the innocence in the youths. The veteran actors, K.S. Balachandran and A. Ketheeswaran were exceptional.

The uniqueness of the movie lies in the fact that there are only two female casts, the restaurant waitress and the young girl over whom Anpu and Akilan are infatuated. Many, however, expressed that the young girl need not have been given a face by the two duet songs, but, rather should have been allowed to the imagination of the audience as to her beauty and charisma just like Maranaai, who is aptly left to the audience to imagine as a ruthless and a hardcore gangster who had lead many murders of Tamil youths. The art of telling a decade long story with the gruesome incidents happening within two days without any flaws is exciting. The pace in which the movie proceeded captivated the audience. I must, however, point out what was observed by my friend, “My main objection is that the film is run by narratives throughout. Usually narrative is used exceptionally in a film but here it is used extensively and defeats the purpose of a visual art.”

The crew has also done its best technologically although lacking slightly in the standard expected of an international film. The blame, however, cannot be attributed as the dearth of talents of the crew, but to the meager finance put into producing the movie.

I had the pleasure of watching the premiere showing of 1999, and I take this opportunity to commend the M.C at the premiere showing. Ms. Suhanya Ketheeswaran was very impressive. Her command of both languages, Tamil and English was excellent. The choice of words, the diction and the presentation were befitting and pleasing. Happy to see hidden talents among out youth finally come public.

Best Gains- must have the Losses’ test-
To constitute them-Gains
- Emily Dickson

It is heartwarming that the sun is finally rising in the horizon of the Tamil Film industry in Canada. Congratulations to the director, producers and the casts and the crew of 1999.

I would like to urge the community to support this movie to encourage the young talents and to promote the Canadian Tamil film industry.